(செ.தேன்மொழி)

கல்முனை - மருதமுனை பகுதியில் போலி வாகன இலக்க தகடுகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போலி இலக்கத்தகடுகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையினரால் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று நிறுத்தி சோதனைக்குட்படுத்தப்பட்ட போது , அதிலிருந்து போலி இலக்கத்தகடுகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக இந்த இலக்கதகடுகளை வைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதே வேளை கார் ஒன்றும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து , 3 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு , காரில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாளிகாவத்தை , தெஹிவலை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.