இந்தியா - தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற  நிலையில், வாக்கெண்ணும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

 இந்நிலையில், தற்போதுவரை(02.05.2021 - மு.ப 11.50 ) மேற்கு மண்டலம், அ.தி.மு.க 33 இடங்களிலும், தி.மு.க 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

வடக்கு மண்டலத்தில் தி.மு.க 15 இடங்களிலும், அ.தி.மு.க 17 இடங்களிலும் சரிசமாக முன்னிலை பெற்று வந்துள்ளதோடு, தெற்கு மண்டலத்தில் தி.மு.க 33 இடங்களிலும் அ.தி.மு.க 18 இடங்களிலும் முன்னிலை வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளள.