bestweb

சுருங்கும் ஜனநாயக வெளி

Published By: Digital Desk 2

02 May, 2021 | 04:16 PM
image

ஆர்.ராம் 

இலங்கை ஒரு பல்லினத்தீவு. இங்கு வாழும் அனைத்து இனங்களுக்கென்றும் வரலாற்று ரீதியான தனித்துவங்கள் உள்ளன. அவ்வினங்கள் தமக்கென்று தனித்துவமாக உள்ள அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களை பற்றி ஒழுகுவதற்கான சகல உரித்துக்களையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறான உரித்துக்கள் அனைத்தும் அந்தந்த இனங்களுக்கு காணப்படும் அடிப்படை உரிமைகளாகும்.

  

அவ்விதமான அடிப்படை உரிமைகளுக்கான சட்ட ஏற்பாடுகள், நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச சமவாயச் சட்டங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில், ஒவ்வொரு ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலத்தின் போதும் அந்த அடிப்படைச் சட்டங்களை பிரயோக ரீதியாக பயன்படுத்துவதில் ஒவ்வொரு இனக் குழுமங்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

  

இந்த ஏற்ற இறக்கங்களையே சாதாரண மக்கள் தமக்கான 'ஜனநாயக வெளிகளாகக்' கருதுகின்றனர். இந்த ஜனநாயக வெளிகள் அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் குணாம்சங்களுக்கு ஏற்ப மாறுபட்டதாகவே இருக்கின்றது. நிரந்தரமான 'ஜனநாயக வெளியொன்று' தற்போது வரையில் நீடிப்பதாக இல்லை.

  

2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி வரையில் நிலவிய ஆட்சிக்காலத்தில் 'ஜனநாயக வெளியானது 'சற்றே அதிகமாக' இருந்தாக பொதுப்படையில் கூறப்படுகின்றது. ஆனாலும், கடந்த ஒரு வருடமும் ஐந்து மாதங்களாக 'ஜனநாயக வெளி மிகச் சுருங்கி விட்டதாக' சாதாரண பொது மக்களே பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக, சீர் திருத்தவாதிகளாக தம்மைச் சித்தரித்து மக்கள் ஆணை பெற்று அதிகாரத்தில் உள்ள தற்போதைய ஆட்சியாளர்களிடத்தில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, பொதுவெளியில் வெளிப்படைத் தன்மையுடன் தமது அபிலாஷகளை பெறுவதற்காக முனையும் தரப்பினருக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள்  போடப்பட்டு வருகின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாட்டில் ஒரு கூட்டணித் தகராறு 

2025-07-18 19:13:30
news-image

செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை...

2025-07-16 17:19:16
news-image

ஈஸ்டர் உண்மை தொடக்கமாக அமையமுடியும்

2025-07-15 16:51:32
news-image

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின்...

2025-07-14 15:59:46
news-image

மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் -...

2025-07-14 14:56:34
news-image

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் இலங்கையுடன் போட்டிபோடும் வியட்னாம்,...

2025-07-14 13:49:20
news-image

அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

2025-07-13 17:29:45
news-image

இலங்கை - இந்திய பாலம் மிகப்பெரிய...

2025-07-13 17:14:26
news-image

மீண்டும் தவ­றி­ழைக்­குமா ஐ.நா.?

2025-07-13 17:11:19
news-image

தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புகள்

2025-07-13 16:38:26
news-image

முஸ்லிம் அரசியல் பலப்படுத்தப்பட வேண்டும்

2025-07-13 16:37:44
news-image

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?

2025-07-13 16:17:33