முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லாவி வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மல்லாவி வைத்தியசாலையில் பணிபுரியும் 47 வயதுடைய ஊழியர் ஒருவருக்கே  இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான நபர் கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபருடன் தொடர்புகளைப் பேணியவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.