சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் வர்க்கத்திற்கும், சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் புரட்சிகரமான  மற்றும் மனமார்ந்த வாழ்த்தினை  லங்காசமசமாஜ கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையின் உள்ளக விவகாரத்தை இந்தியா தேர்தல் பிரசாரமாக்கக் கூடாது - திஸ்ஸ  விதாரண | Virakesari.lk

தொழிலாளர்களை ஒன்றிணைப்பதுடன் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடும் தொழிற்சங்கங்கள் மற்றும்  அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

லங்கா சமசமாஜ கட்சி தன்னகப்படுத்தியிருந்த தொழில் சங்கங்கள் தொடர்பான சட்டங்கள், தொழிலாளர் சட்டங்களுக்கான மதிப்பு  தற்போது  ஒப்பந்த அடிப்படையிலான தொழில் முறைமை ஊடாக முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான தொழில் முறைமையை இல்லாதொழிப்பது இம்முறை மே தினத்தின்  நோக்கமாகும்.

தொழிலாளர்கள் போதுமான  ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் வாழ்க்கை செலவுகள் நாளாந்தம் அதிகரிக்கப்பட்ட  வண்ணம் காணப்படுகிறது.

இதனால்  செல்வந்தர்கள் செல்வந்தர்களாக வளர்ச்சிப் பெற்றுள்ளதுடன், வறுமை கோட்டில் உள்ளவர்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இலங்கையின் மந்த போசன தன்மை 18. சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

செல்வந்த வர்க்கத்தினர் தற்போது பூகோளிய  பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள் இதன் தாக்கத்தை தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுமத்துகிறார்கள்.

தொழிலாளர்களின் உழைப்பின் ஊடாகவே செல்வந்த வர்க்கம்  முன்னேறியுள்ளது.  தொழிலாளர்களின் நலன் குறித்து செல்வந்தவர்க்கத்தினர்  கவனம் செலுத்த வேண்டும். அல்லது தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

செல்வந்தவர்க்கத்தினர் உழைக்கம் வர்க்கத்தின் மீது அதிகாரங்களை தொடர்ந்து பிரயோகிக்கிறார்கள். இவ்வாறான தன்மையினை தற்போதும் அமெரிக்காவிலும், இலங்கையிலும் காண கூடியதாகவுள்ளது.

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சி அரசாங்கத்திற்கு பல முறை வலியுறுத்தியுள்ளது.

 ஏழை மக்களிடமிருந்து அறவிடப்படும் மறைமுக வரியை குறைப்பதற்கு பதிலாக   செல்வந்தர்களின் சுமையை பகிர்ந்தளிக்கும் வகையில் 14 சதவீதம் வருமான வரியினை 50 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்.

இதனை காட்டிலும் திருத்தமான முறையில்  70 சதவீதமேனும் அதிகரிக்க வேண்டும்.தொழிலாளர்களின் உரிமைகளை சிறந்த முறையில் மீள் திருத்தம் செய்வதன் ஊடாக மகிழ்ச்சியான தொழிலாளர் தினத்தை கொண்டாட முடியும்.