கொரோனா தொற்று பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சோயா பால் 

Published By: Digital Desk 4

30 Apr, 2021 | 09:47 PM
image

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை குறைக்க சோயா பாலில் உள்ள லுனாஸின் என்ற புரதம் பயன்படுகிறது என ஆராய்ச்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டொக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான மருத்துவர் சுதா சேஷய்யன் கூறியதாவது,

'கொரோனா தொற்று பாதிப்பை உண்டாக்கும் 'சார்ஸ் கோவி 2' என்ற ஒரு வைரஸ், ஆர் என் ஏ வகையினதான வைரஸ். இத்தகைய வைரஸ்களை எதிர்ப்பதற்கான தக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை.

எதிர் மருந்துகள் இல்லாத நிலையில் வைரஸ்களை எதிர்ப்பதற்கான அல்லது அது உடலுக்குள் சென்று பல்கிப் பெருகுவதை தடுப்பதற்கான ஒரு முறை மரபியல் இடையீடு செய்வதாகும். 

அதாவது எம்முடைய அணுக்களில் 'ஹிஸ்டோன் அசிட்டைல்டிரான்ஸ்ஃபரேஸ்' என்னும் என்சைம் உள்ளது. இந்த என்சைமை பயன்படுத்தி தான் கொரோனா வைரஸானது எம்முடைய அணுக்களுக்குள் ஊடுருவி பல்கி பெருகுகிறது.

இந்த என்சைமின் பயன்பாட்டை தடுத்து விட்டால்.., வைரஸ் பல்கிப் பெருகுவதை தடுத்து விட இயலும்.

இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த என்சைமின் பயன்பாட்டை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தனர்.

சோயா விதைகளிலும் மிக குறைந்த அளவில் கோதுமை, பார்லி, கம்பு ஆகியவற்றிலும் உள்ள லுனாஸின் என்னும் பெப்டைட் அதாவது புரதச்சத்து. 

இந்த என்சைம் பயன்பாட்டை தடுக்கும் என்று இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்தது. அதன் பயனாக லுனாஸின் என்னும் இந்த புரதச்சத்தை டெங்கு காய்ச்சல் சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 நோய்க்காக நடைபெற்ற சோதனை முறையில் சில நோயாளிகளுக்கு லுனாஸின் வழங்கப்பட்டது.

அவர்களை ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது, மூன்றிலிருந்து நான்கு நாட்களுக்குள் நெகட்டிவ் என்ற சோதனை முடிவு வெளியானது உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்த லுனாஸின் என்னும் புரதச் சத்து, சில மேலைத்தேய நாடுகளில் ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன், ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி போன்ற நோய்களுக்கும், புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

இருந்த போதிலும் இந்த லுனாஸின் என்னும் புரதச்சத்து அணுக்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாதா? என்பதை தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாடு டொக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தால் திசு வளர்ப்பு சோதனைகளும்,

விலங்கின சோதனைகளும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த சோதனைகளின் விலங்கின திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் திசுக்களுக்கும், அணுக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. எனவே லுனாஸின் பெப்டைட் அல்லது லுனாஸின் உள்ள சோயா விதை பால் அருந்தினால் 'சார்ஸ் கோவி 2' வைரஸின் பாதிப்பை குறைக்கலாம்.  என்று தெரிவித்தார்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29