தென்ஆப்பிரிக்காவில் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரை 6 வயது சிறுவன் போத்தலிலால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் வடக்கு கேப் பகுதியைச் சேர்ந்த செகோமோட்சோ கேர்சேவ் தனது 6 வயது மகன் குட்ல்வானோ கேர்சேப் அவனது அண்ணன் தபிசோ (8) ஆகியோரை பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தவேளையில்,வழியில் ஒரு மர்ம நபர் திடீரென குறுக்கிட்டு கேர்சேவிடம்  பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, கோபமடைந்த அவன் செகோமோட்சோவை தாக்கி  பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த 6 வயதான குட்லவானோ கேர்சேப் அருகில் கிடந்த போத்தலினை உடைத்து தாயை பாலியல் துஷ்பியோகம் செய்ய முயன்றவரை சரமாரியாக குத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தில்  படுங்காயமடைந்த மர்மநபர் சம்பவயிடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தன்னை காப்பாற்றவே எனது மகன் குறித்த நபரை கொலை செய்தாரென செகோமோட்சோ தெரிவித்தார்.