6,000 - 14,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு

Published By: Vishnu

30 Apr, 2021 | 12:19 PM
image

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஒரு குளத்திற்காக அகழ்வுப் பணிகளை மேற்கொண்டபோது ஒரு தம்பதியினர் பூமியின் பனி யுகத்திற்கு முந்தைய எலும்புகளின் தொகுப்பினை கண்டுபிடித்துள்ளனர்.

லாஸ் வேகாஸில் அமைந்துள்ள ஃபிலாய்ட் லாம்ப் பூங்காவிற்கு அருகில் வசிக்கும் தம்பதிகளே கட்டுமானக் குழுவினருடன் இணைந்து முன்னெடுத்த அகழ்வுப் பணிகளின்போது இவற்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த எலும்புத் தொகுதியானது 6,000 முதல் 14,000 ஆண்டுகாலம் வரை பழமையானதாக இருக்கலாம் என்று நெவாடா அறிவியல் மையத்தால் கூறப்படுகிறது.

விசாரணையின் பின்னர், கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மனிதருடையது அல்ல என்றும், அவை குதிரை அல்லது அது போன்ற பெரிய பாலூட்டிகளின் எலும்புகள் ஆக இருக்கக்கூடும் என்றும் நெவாடா அறிவியல் மைய ஆராய்ச்சி பணிப்பாளர் ஜோசுவா போண்டே தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தற்சமயம் அகழ்வாராச்சியாளர்கள் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமையினால், தங்கள் குளத்தைத் தொடர்ந்து கட்டியெழுப்ப குறித்த தம்பதியினர் காத்திருக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right