(.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நடமாடிய ஒருவரை லிந்துலை பொலிஸார்   கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட நபரிடம் கஞ்சா பக்கட்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து, குறித்த நபரை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அவரிடமிருந்து மூன்று கிராம் கொண்ட கேரளா கஞ்சா பக்கட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன் இவரை இன்று நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.