(எம்.எம்.சில்வெஸ்டர்)

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணி இன்றைய முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான நிலையில் உள்ளது.

No description available.

கண்டி பல்லேகலையில் இன்று ஆரம்பமான இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரட்ண முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரட்ண, லஹிரு திரிமான்ன ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது. 

டெஸ்ட் அரங்கில் தனது 12 சதத்தைக் கடந்த கருணாரட்ண, 190 பந்துகளில் 15 பெளண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சொரிபுல் இஸ்லாமின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் லிட்டன் தாஸ்ஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 

No description available.

தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் சொரிபுல் இஸ்லாம் டெஸ்ட் அரங்கில் முதல் விக்கெட் என்பதுடன், பங்களாதேஷ் அணிக்கு மிகவும் அவசியமாக விக்கெட்டையும் எடுத்துக்கொடுத்தார். திமுத் – திரிமான்ன ஜோடி தமக்கிடையில் 209 ஓட்டங்களை பகிர்ந்திருந்தது.

தொடர்ந்தும் தனது நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் திரிமான்ன டெஸ்ட் அரங்கில் மூன்றாவது சதம் அடித்து அசத்தினார். இன்றைய முதல் நாள் நிறைவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.  ஆடுகளத்தில் திரிமான்ன 131 ஓட்டங்களுடனும், ஓஷத பெர்னாண்டோ 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.