காணாமல்போன 3 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் : தேடுதல் வேட்டையில் பொலிஸார்

Published By: Digital Desk 3

29 Apr, 2021 | 12:25 PM
image

இந்தியாவில் பெங்களூரில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், 3000 கொரோனா தொற்றாளர்கள் காணமால் போயுள்ளனர். 

இவ்வாறு காணமால்போனவர்கள் தங்கள் தொலைபேசி இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்,  காணாமல் போனவர்களால் வைரஸ் பரப்புவதற்கு சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம்  கர்நாடகாவில் 39,047 தொற்றாளர்களும், 229 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், பெங்களூர் நகரில் 22,596 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் கர்நாடகா மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவிக்கையில்,

கடந்த ஒரு வருடகாலமாக கொரோனா நோயாளிகள் காணாமல் போவது தொடர்பான பிரச்சினை இடம்பெற்று வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் காணாமல் போவது கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு இலவசமாக மருந்துகளை கொடுக்கிறோம். இதன் மூலம் 90 சதவீதம் பேர் குணமடைகிறார்கள், ஆனால் ஆனால் கொரோனா பாதித்தவர்கள் தங்கள் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைத்துவிடுகிறார்கள்.

பின்னர் மோசமான நிலையில் வைத்தியசாலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை வசதிகள் கிடைப்பது கடினமாகிறது. இதுதான் இந்த மாநிலத்தில் நடக்கிறது. பெங்களூரை பொருத்தவரை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவடன் தங்கள் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைத்துவிட்டு வீடுகளை விட்டு சென்றுவிடுகிறார்கள்.

அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி தெரியப்படுத்தவில்லை, இது பாரிய பிரச்சினையாகும்.

அவர்கள் எங்கே செல்கிறார்கள் என தெரியவில்லை. உங்களை இரு கரம் கூப்பி கேட்கிறேன். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைக்காதீர்கள் , வீடுகளை விட்டு எங்கும் செல்லாதீர்கள். கடைசி நேரத்தில் தீவிர சிகிச்சை பெறுவதை தவிருங்கள். சிலர் வெளிமாநிலங்களுக்கு கூட சென்றுவிடுகிறார்கள். அவர்களை பொலிஸார் கண்டுபிடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03