புத்தளம் மீஓயா பகுதியில் ஆயுதத்துடன் நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் ஒன்றே கைப்பற்றப்பட்டுள்ளது.

முறியகுளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்த நபரை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.