ஆப்கானிஸ்தானில் தனது 20 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வொஷிங்டன் தயாராகி வருவதால் அதிகரித்த அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, அத்தியாவசியமற்ற ஊழியர்களை தமது காபூல் தூதரகத்தை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

தற்போது சுமார் 2,500 பேர் கொண்ட அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதத்திற்குள் ஆப்கானிலிருந்து திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த உத்தரவு வந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு பயண ஆலோசனையில், அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் அமெரிக்க தூதரகம் காபூலில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது, எனினும் அதன் செயல்பாடுகளை வேறு இடங்களில் தொடர முடியும் என்று கூறியுள்ளது.

காபூலில் செயல்படும் அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன், காபூலில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மத்தியில் வெளியுறவுத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது என்றார்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் வொஷிங்டனின் சிறப்பு தூதர் ஸல்மே கலீல்சாத் ஒரு செனட் விசாரணையில் ஒரு தலிபான் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றால் அமெரிக்க உதவி குறைக்கப்படலாம் என்று எச்சரித்தார்.