தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளகாரணமாக கொரோனா அச்சநிலைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

வீதிகளில் பயணிப்பவர்கள்  பொது இடங்களில்  கூடுபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  

நேற்றைய தினம் தருமபுரம் பொலிஸ்பிரிவில் பல்வேறு பகுதிகளில்  விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மக்களை முக கவசங்களை அணியுமாறும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.