அப்புத்தளையில் கணவனை கொலைசெய்ததாக கூறப்படும்  பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் 28 வயதான பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற கடுமையான வாய்த்தர்க்கத்தினால், குறித்த மனைவி தடி ஒன்றினால் கடுமையாக தாக்கியதால் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.