ரிஷாத் - ஹெட்மேயரின் போராட்டம் வீணானது ; ஒரு ஓட்டத்தால் பெங்களூரு வெற்றி!

Published By: Vishnu

28 Apr, 2021 | 08:31 AM
image

ஐ.பி.எல். தொடரில் டேல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் 22 ஆவது லீக் ஆட்டம் நேற்று அஹமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதாமனத்தில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் துடுப்பெடுத்தாடியது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான விராட் கோலி 12 ஓட்டங்களுடனும், படிக்கல் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, பெங்களூரு அணியின் முதலிரு விக்கெட்டுகள் 30 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தன.

மூன்றாவது விக்கெட்டுக்காக மெக்ஸ்வேல் - பட்டிதர் ஜோடி அணியின் ஓட்ட இலக்கினை 8 ஓவர்கள் நிறைவுக்கு 57 வரை கொண்டு சேர்த்தது.

எனினும் அதன் பின்னர் 9.3 ஆவது பந்து வீச்சில் அமித் மிஷ்ராவின் பந்தினை சிக்ஸருக்கு விளாச முற்பட்ட மெக்ஸ்வெல் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பட்டிதரும் 22 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதனிடையே களமிறங்கிய ஏ.பி.டி. வில்லியர்ஸ் இறுதிவரை ஆடுகளத்தில் நிலைத்து நின்றாடி மொத்தமாக 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களை பெற்றதுடன், ஐ.பி.எல். அரங்கிலும் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

குறிப்பாக இறுதி ஓவருக்காக மார்கஸ் ஸ்டொய்னஸின் பந்து வீச்சை எதிர்கொண்ட அவர்,  அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை தெறிக்க விட்டார்.

ஸ்டொய்னஸின் அந்த ஓவரில் மொத்தம் 23 ஓட்டங்களை திரட்டியது பெங்களூரு அணி. 

இறுதியாக பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது. ஏ.பி.டி. வில்லியர்ஸ் 75 ஓட்டங்களுடனும், டேனியல் சாம்ஸ் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

172 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் ஆரம்ப வீரர்களான பிரித்வி ஷா 21 ஓட்டத்துடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காது 4 ஓட்டங்களுடன் சிராஜின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் வில்லியர்ஸிடம் பிடிகொடுத்தார்.

டெல்லியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 47 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரிஷாத் பந்தும் - மார்கஸ் ஸ்டொய்னஸும் விக்கெட்டுகளை பறிகொடுக்காது ஓட்ட குவிப்பில் கவனம் செலுத்தினர்.

இதனால் 12 ஓவர்கள் நிறைவில் டெல்லி அணி 81 ஓட்டங்களை பெற, 12.4 ஆவது ஓவரில் ஸ்டொய்னஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய சிம்ரன் ஹேட்மேயர் ரிஷாத் பந்துடன் கைகோர்த்து அதிரடி காட்ட, டெல்லி அணியின் வெற்றிக்கு இறுதி நான்கு ஓவரில் 56 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தது.

ஹெட்மேயர் கிடைத்த பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 23 பந்தில் அவர் அரைசதம் அடித்தார்.

குறிப்பாக 18 ஆவது ஓவரில் ஹேட்மேயர் கைல் ஜேமீசனின் பந்து வீச்சினை எதிர்கொண்டு 3 சிக்ஸர்களை பறக்க விட மொத்தமாக அந்த ஓவரில் 21 ஓட்டங்கள் பெறப்பட்டது.

இறுதி ஓவருக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட, டெல்லி அணியால் அந்த ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அதன்படி டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று, ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

ஆடுகளத்தில் ரிஷாத் பந்த் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களுடனும், ஹேட்மேயர் 25 பந்தில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக  53 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஏ.பி.டி.வில்லியர்ஸ் தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித்...

2024-06-22 00:37:19
news-image

குவின்டன் டி கொக், டேவிட் மில்லரின்...

2024-06-22 00:06:34
news-image

இணை வரவேற்பு நாடுகள் மேற்கிந்தியத் தீவுகள்...

2024-06-21 21:45:08
news-image

அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியுடன்...

2024-06-21 14:03:31
news-image

கமின்ஸ் ஹெட்- ட்ரிக், வோர்னர் அரைச்...

2024-06-21 11:21:46
news-image

அவுஸ்திரேலியா - பங்களாதேஷ் அணிகள் மோதும்...

2024-06-21 00:57:21
news-image

சூரியகுமார், பும்ரா அபார ஆற்றல்கள்; ஆப்கனை...

2024-06-21 00:10:44
news-image

இந்திய துடுப்பாட்டத்துக்கும் ஆப்கான் பந்துவீச்சுக்கும் இடையிலான...

2024-06-20 13:23:11
news-image

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத சம்பவங்கள் –...

2024-06-20 12:48:55
news-image

தங்கப் பதக்கத்தை தக்கவைக்க ஆர்வமில்லாத ஜமைக்க...

2024-06-20 10:59:59
news-image

சுப்பர் 8 சுற்றை அமோக வெற்றியுடன்...

2024-06-20 13:44:28
news-image

அணித் தலைமையிலிருந்து விலகிய வில்லியம்சன் 'கிவி'யின்...

2024-06-20 10:13:02