திருகோணமலை - ஹொரவப்பொத்தான பிரதான வீதியில் பம்மதவாச்சி பகுதியில் இன்று முற்பகல் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில் படுகாயமைந்த குறித்த இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கிண்ணியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மன்னார்- எருக்கலம்பிட்டி- புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த எம்.ஐ.எம்.பர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.