சிறுவர்கள் மீது  10732      துஷ்பிரயோக சம்பவங்கள் கடந்த வருடத்தில் மாத்திரம்  நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் சந்திரானி பண்டார மேலும் குறிப்பிடுகையில்  

கடந்த வருடம் நாடு முழுவதும்   10732  சிறுவர்கள் மீதான துஸ்பிரயோக சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளன. குறித்த  குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு   வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி 74 சிறுவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் பாரதூரமான விதத்தில் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் குறித்த   74 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் 176   துஷ்ப்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட  பொலிஸ் பொலிஸ் குழு கவனம் செலுத்தி வருகின்றது. 

குறித்த குற்ற செயல்களை குறைப்பதற்காக இனி வரும் காலங்களில் மிக கடுமையான சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.   

சிறுவர்களை கயவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு பெற்றோர்களிடம் இருந்து பூரணமான ஆலோசனை தேவையாகும் என்றார்.