யாழ்.மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை கவலையளிப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
வழிபாட்டு இடங்களில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையினை பொதுமக்கள் அனுசரித்துச் செல்ல வில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது
எனவே இந்த அலட்சியத்தை விடுத்து சுகாதார நடை முறைகளை அலட்சியம் செய்யாது பொதுமக்கள் செயற்படவேண்டும்
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த சுகாதார நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது
எனவே ஆலயங்களில் 50 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்
இந்த விடயங்களை ஆலய பரிபாலன சபையினர்.மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறையினை பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM