கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்காக பிரார்த்திப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆவது அலை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு தீவிரமாக பரவி வருகிறது. வடமாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் உடல்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது. 

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் அன்றாடம் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு திணறி வருகிறது. இந்தியாவில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாட்டு அரசுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

இந் நிலையில் பாபர் அசாம் தனது டுவிட்டர் பதிவில், எங்கள் பிரார்த்தனைகள் இந்திய மக்களுக்காக இருக்கும். இந்தியாவுடன் துணை நிற்க வேண்டிய நேரம் இது. இந்திய மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் புதிய நோயாளர்கள் அடையாளம் மற்றும் இறப்பு எண்ணிக்கை ஐந்தாவது நாளாக புதிய சாதனைகளை எட்டியுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் இந்தியாவில் ஒரே நாளில் 3.52 லட்சம் கோவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2,812 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.