நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பொலன்னறுவை, மற்றும் மாத்தளை மாவட்டங்களிலேயே சில பிரதேசங்கள் கொரோனா அச்சுறுத்தலையடுத்து இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும் மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசத்தின் பள்ளேகும்புர கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி  மேலும் தெரிவித்துள்ளார்.