ரிஷாத், ரியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

27 Apr, 2021 | 02:49 PM
image

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரும் , பயங்கரவாத விசாரணைப்பிரிவினரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் , பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6:1 சரத்துக்கமைய 72 மணித்தியாலய தடுப்புகாவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலையுடன் அந்த அனுமதிக்கான காலம் முடிவடைந்திருந்தது.  

சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக , விசாரணை அதிகாரிகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 9:1 சரத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டனர்.

அதற்கமைய நேற்றைய தினம் முதல் அவர்கள் இருவரும் எதிர்வரும் 90 நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்தஞாயிறுதின குண்டு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய , கிடைக்கப் பெற்றுள்ள தனிநபர்களின் சாட்சிகள் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான சாட்சிகளின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களிடம் மேலும் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் , அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38