சியம்பலாண்டுவ, மொனராகலை, புத்தல ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 15 பாடசாலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை கல்விவலயத்திலுள்ள  5 பாடசாலைகளும் புத்தல கல்வி வலயத்திலுள்ள  4 பாடசாலைகளும் சியம்பலாண்டுவ கல்வி வலயத்திலுள்ள  6 பாடசாலைகளும் இவ்வாறு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.

இந்நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல், வடமேல் மாகாண பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மேல் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.