யாழில் ஹெரோயின், ஐஸ் விற்பனையில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரியுடன் மூவர் கைது

Published By: Digital Desk 4

25 Apr, 2021 | 07:20 PM
image

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசங்களில் நெடுங்காலமாக ஹெரோயின், ஐஸ், குடு, கஞ்சா கடத்தல், விற்பனை செய்துவந்த பிரதான சூத்திரதாரியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு குருநகர் பகுதியை  சேர்ந்தவர்கள் கடல் வழியாக போதைப் பொருட்களை  இலங்கைக்கு கடத்தி நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள்.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக  யாழ் குடாநாட்டிற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை யாழ் குடாநாட்டிற்கு கடத்தி வந்த தலைவர் உட்பட மூவர் யார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினருக்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கடத்தல் காரர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 கோடி ரூபா பெறுமதியான ஐஸ்,ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 12 தடவைக்கு மேல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய இடங்களுக்கு தரை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த குழுவினர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்  மேனன் அணியினரால் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04