கொரோனா சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் புத்தளம் நகரில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசமின்றி புத்தளம் நகரில் இவ்வாறு சுற்றித் திரிந்தவர்களும், வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதாக வருகை தந்தவர்களுமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இம்மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.