மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் மோட்டர்சைக்கிளில் சென்ற இருவர் எதிரே வந்த உழவு இயந்திரதுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மோட்டார் சைக்கிளில் பின் இருந்து சென்றவர் மோட்டர்சைக்கிளில் இருந்து பாய்ந்து உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளதுடன் உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உன்னிச்சை 3 ஆம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை நிதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காயங்குடா ஆற்றுப்பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்றிக் கொண்டு வேகமாக உழவு இயந்திரம் பயணித்தபோது எதிரே ஒரு மோட்டர்சைக்கிளில் இருவர் சென்ற நிலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டர்சைக்கிலில் பின் இருந்து சென்றவர் மோட்டர்சைக்கிளை விட்டு உழவு இயந்திரத்துக்குள் பாய்ந்ததையடுத்து உழவு இயந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்ததுள்ளார்
இதனையடுத்து படுகாயமடைந்தவரை ஊழவு இயந்திரத்தில் தூக்கி ஏற்றிக் கொண்டு மண்யாட்டிற்கு கொண்டுசென்று அங்கு சுமார் அரைமணித்தியாலம் வைத்துவிட்டு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM