ஆர். ராம்
“தமிழர்கள் நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்கி விடுவார்கள். இதற்கு இந்தியாவும் மேற்குலகமும் பின்னால் நின்று செயல்படும். முஸ்லிம்கள் கடும்போக்கு மதப்பின்பற்றலால் எமது அடையாளங்களை அழித்துவிடுவார்கள்.
அதற்கான அனைத்து வளங்களையும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் தாராளமாக வழங்கும்.
ஈற்றில் பெரும்பான்மை மக்களாக இருக்கும் நாம் நாடற்றவர்களாக ஆகிவிடுவோம். பௌத்தர்களுக்கு என்று இருக்கும் சொற்பநாடுகளில் பிரதானமாக இருக்கும் எம் நாட்டை விட்டு, அடையாளத்தை தொலைத்து ஏதிலிகளாகி விடுவோம்.
ஆகவே எப்போதும் நாமே ஆள்பவர்களாகவும், பூரண அதிகாரங்களைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களை (தமிழர்கள், முஸ்லிம்களை) எமது ‘பிடிக்குள்ளேயே’ வைத்திருக்கவேண்டும்”
இந்த கோட்பாட்டுச் சித்தாந்த பிரசாரத்தினால் தென்னிலங்கை மக்களின் மூளைகளை முலாமிட்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றினார்கள் ராஜபக் ஷவினர்.சிங்கள தேசியவாதத் தரப்புக்களின் ஆதரவு, பௌத்த பீடங்களின் ஆசீர்வாதம் ஆகியனவும் முறையாக இருக்கவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் ஒருங்கே பெற்றிருந்தார்கள் ராஜபக் ஷவினர்.
‘போர்க்கள நாயகன்’ ‘நாட்டை மீட்கும் ரட்சகன்’ என்ற ஆர்ப்பரிப்புக்கள் புடைசூழ அரியணை ஏறியவரிடத்தில் ஆணை பெண்ணாக, பெண்ணை ஆணாக மாற்றுவதைத்தவிர்த்து ஏனைய அனைத்து அதிகாரங்களையும் 20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மொத்தமாக வாரிச்சுருட்டிகையில் கொடுக்கப்பட்டாகிவிட்டது.
இத்தனை, அங்க இலட்சணங்களுடனும் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தவரால் ‘முறையாகச்’ சென்று மாற்றத்தினைக் ஏற்படுத்துவதற்கான முதலடியைக் கூட எடுத்து வைப்பதற் குமுடியாத நிலைமையே இன்றளவில் ஏற்பட்டிருக்கின்றது.
அரசியல்அனுபவமின்மையும், படைச்நிருவாக சித்தாந்த மனோநிலையும் இந்த ‘முடியாத’ நிலைமைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றது. இருந்தாலும் அதனை உணர்வதற்கு கூட மனதளவில் தயாரில்லாத நிலையே ‘தலைமை’ப் பாத்திரத்தில் இருப்பவரிடம் நீடிக்கின்றது.
அவ்விதமான தலைமையால் ‘சீர்திருத்தத்தினையோ, அமைப்புமுறை மாற்றத்தினையோ, ஜனநாயக வெளியையோ’ இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வெறுமனே காலத்தினை வீணடிக்கும்செயலாகும்.
இதனை தென்னிலங்கை சிங்கள,பௌத்த பெரும் பான்மைமக்கள் ஏற்றுக்கொள்வதற்கு பின்னடிக்கலாம். ஆனால் ஆளும் தரப்பில் உள்ளவர்களே ‘அரசாங்கத்தின் இலக்கு தவறிவிட்டது’ என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் அதனை பகிரங்கமாகவும் கூறிவிட்டார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-25#page-10
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM