கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கல் : ஆளும் தரப்புடன் கூட்டமைப்பு முக்கிய பேச்சு : சமலுடனான சந்திப்பில் இணக்கம்

25 Apr, 2021 | 07:17 AM
image

(ஆர்.ராம்)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கியமை தொடர்பாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுடன் எதிர்வரும் மே 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளது.

அதுவரையில், கல்முனை தமிழ் பிதேச செயலகத்திற்கான புதிய பெயர்ப்பலகை உள்ளிட்ட இதர செயற்பாடுகள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும்ரூபவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான செல்வம் அடைக்கலநாதன்ரூபவ் கோவிந்தன் கருணாகரம், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இச்சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவிக்கையில்,

பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் கல்முனை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கியமை தொடர்பாக நாம் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். அதன்போது 1993 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்ப் பிரிவாக இயங்கி வரும் இந்தப் பிரதேச செயலகத்திற்கு காணி மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்படவில்லை.

தற்போது இந்த பிரதேச செயலகத்தில் 9 ஆவது பிரதேச செயலாளர் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார். இந்தப் பிரதேச செயலாளர் நிருவாகத்தின் கீழ், 39 கிராமா சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இங்கு 135 ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள்.

அவ்விதமான ஒரு பிரதேச செயலகத்தினை ‘உப பிரதேச செயலம்’ என்ற வகைக்குள் குறிப்பிட்டு தரமிறக்குவதானது பொருத்தமற்ற செயற்படாகும். இலங்கை வரலாற்றில் முதன்முதலாக தரமிறக்கப்பட்ட செயலகமாகவும் இதுவே காணப்படுகின்றது.

நீதி, நியாயமற்ற முறையில் தனிநபர் ஒருவரின் அரசியல் இருப்பிற்காக இவ்விதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே அச்செயற்பாட்டினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடுரூபவ் இந்த விடயம் நியாயமான முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

அவர், உடனயடியாகவே அம்பாறை மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு, கல்முறை வடக்கு தமிழ்பிரதேச செயலகத்தினை உப பிரதேச செயலகம் என்று பெயர்ப்பலகையை அமைத்தல் உள்ளிட்ட இதர அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அமைச்சர், செயலாளர் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளர்.

அதன்பிராகரம் குறித்த சந்திப்பின்போது இந்த விடயம் சம்பந்தமான வரிவாக கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00