(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். 

May be an image of 1 person, sitting and indoor

ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பௌத்த ஆலோசனை சபை கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

May be an image of 1 person and sitting

நில அளவினை விரிவுபடுத்தி புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் ஒரு நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும். 

தவறான கருத்துக்களை பரப்பி அனைத்தையும் எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ் அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக மக்களுக்கு சரியான தெளிவை வழங்கி, அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேரர்கள் இதன் போது சுட்டிக்காட்டினர்.

May be an image of 1 person, sitting and indoor

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இத்திட்டம் தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தியதுடன் பொருளாதாரத்திற்கும் நாட்டுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

 அத்தோடு இதன் போது கொவிட் 19 புதிய உருமாற்றம், சுகாதார துறையின் ஆலோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.