(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுகிறது என்பதற்காக வழமையை மாற்றி மேலதிக கொடுப்பனவை வழங்காமல் இருக்க முடியாது.
கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தொழிலுக்குச் செல்கின்றனர்.
எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
அச்சத்தின் மத்தியிலேயே அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதே போன்று பாடசாலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.
மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
கொவிட் கட்டுப்படுத்தலுக்காக பெருந்தோட்டங்களில் எந்தவொரு முறையான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்திற்குள் நுழையும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM