'தல' அஜித்தின் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளிவைப்பு

Published By: Digital Desk 2

24 Apr, 2021 | 11:26 AM
image

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் 'தல' அஜீத் நடிப்பில் தயாராகி வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு திகதி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு 'தல' அஜீத் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'வலிமை'. இப்படத்தில் 'தல' அஜித்துடன் தெலுங்கின் முன்னணி நடிகர் கார்த்திகேயா, பொலிவுட் நடிகை ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் 'வலிமை' படத்தின் அப்டேட்டை அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இதனால் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், 'தல' அஜித்தின் 50வது பிறந்த நாளான மே 1ஆம் திகதி வெளியாகும் என தெரிவித்தார். உற்சாகமடைந்த அஜித்தின் ரசிகர்கள் மே 1ஆம் திகதிக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக 'வலிமை' படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும், கலைஞர்களும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மே 1ஆம் திகதி வெளியிடுவதற்கு பதிலாக, வேறு திகதியில் வெளியிடலாம் என கேட்டுக்கொண்டனர். இதன் காரணமாக 'தல' அஜித்தின் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட் மே 1ஆம் திகதி வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் சோர்வடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்