ரியோ ஒலிம்பிக்கின் 400X100 பெண்களுக்கான ரிலே ஒட்ட போட்டியில் ஓலிம்பிக் வரலாற்றில் என்றுமே இல்லாத வழமைக்கு மாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டியின் போது இரண்டாவது நபருக்கு கோலை மாற்றும் போது அமெரிக்க வீராங்கனைகள் கையிலிருந்த கோலை தவறவிட்டதால் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.

எனினும் பிரேசிலிய வீராங்கனையின் தோல்பட்டை பட்டதாலேயே கோல் தவறவிடப்பட்டதாக அமெரிக்க வீராங்கனைகள் முறைப்பாடு தெரிவித்தனர்.

இதனை ஆராய்ந்த நடுவர்கள் பிரேசிலிய வீராங்கனையின் தோல்பட்டை  அமெரிக்க வீராங்கனையின் உடலில் படுவதை கண்டறிந்துள்ளனர்.

இதனால் பிரேசில் அணியை போட்டியிலிருந்து நீக்கிவிட்டு, அமெரிக்க அணியை மீண்டும் 2 ஆவது தடவையாக 400X100 ரிலே ஒட்டத்தினை மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

இதன்படி தனியானதொரு ஒழுங்கையில், ஓட்டத்தினை மேற்கொண்ட அமெரிக்கா 41.77 செக்கன்களில் ஓட்டத்தினை நிறைவுசெய்து இன்று இடம்பெறவுள்ள இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இந்நிலையில் பிரேசில் இறுதி போட்டிக்கு பங்குபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.