விகாரையில் திருடிக் கொண்டிருந்த நபர், சி.சி.ரி.வி.கெமராவின் உதவியுடன் எல்ல பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல வெள்ளவாய பிரதான வீதியில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே, மேற்படி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விகாரைக்கு பொறுப்பான தேரர் தனது அறையிலிருந்தவாறே, விகாரையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கெமராவின் ஊடாக விகாரையில் திருடன் புகுந்து திருடிக்கொண்டிருந்த காட்சியை பார்த்ததும், எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
இப் புகாரையடுத்து, விரைந்த பொலிஸார் திருடனை கைதுசெய்ய முற்படும்போது, திருடன் தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து விகாரையை சூழவுள்ள மக்களின் உதவியுடன் பொலிஸார் திருடனை மடக்கிப் பிடித்தனர்.
இதேவேளை, மக்கள் திருடனை தாக்கியதையடுத்து, திருடன் கடுங்காயங்களுடன் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில், பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருடப்பட்ட விகாரையின் பொருட்கள் பலவற்றையும், பொலிசார் மீட்டுள்ளனர். திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM