ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் கைது

24 Apr, 2021 | 06:44 AM
image

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் கைதுசெய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

May be a Twitter screenshot of 1 person and text that says 'Rishad Bathiudeen @rbathiudeen The CID has been standing outside my house in Boudhaloka Mawatha since 1.30 am today attempting to arrest me without a charge. They have already arrested my brother. I have been in Parliament, and have cooperated with all lawful authorities until now. This is unjust. 2:33 am 24 Apr 21 Twitter for Android'

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின்  அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right