சமூக - ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை விரைவில் பிரதான ஊடகங்களுக்கும் ஏற்படலாம் - ஹெக்டர் அப்புஹாமி

Published By: Digital Desk 3

23 Apr, 2021 | 04:25 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் தற்போது சமூக ஊடகங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எதிர்காலத்தில் பிரதான ஊடகங்களுக்கும் ஏற்படும். ஊடகங்களை மாத்திரமின்றி மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளின் குரலையும் முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் உரையாற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து கடந்த காலங்களில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களை கேள்விக்குள்ளாக்கி , நீதித்துறை சுயாதீனத்தை கேள்விக்குறியுள்ளாக்கியுள்ளனர். அத்தோடு பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்புவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதமாகும். ஆனால் தற்போது பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எதிராகவும் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடளிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தினுள் பாதுகாப்பு இல்லாமலாக்கப்படும் போது , மக்களின் பாதுகாப்பிற்கு எவ்வாறு உத்தரவாதமளிப்பது? தற்போது சமூக ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் எதிர்வரும் காலங்களில் பிரதான ஊடகங்களுக்கும் ஏற்படும். இவ்வாறு எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் , உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு இலட்சக்கணக்கான ஹரின் பெர்னாண்டோக்களை உருவாக்க நாம் தயாராகவுள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கமே புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தியதாகவும் , தாம் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் அதனை ஸ்திரப்படுத்துவதாகவும் கூறினர். ஆனால் அதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. 

இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்புவர்களுக்கு எதிராக சி.ஐ.டி.யில் முறைப்பாடளிக்க முடியாது. பாராளுமன்றத்தில் உரையாற்றுவது பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதமாகும். இந்த விதிமுறைகளை மீறி சி.ஐ.டி. யால் அழைப்பு விடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17