(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கனேவத்த ரயில் நிலையம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை  மூடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.   

கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் ரயில் நிலையங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என ரயில் நிலைய  பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன சாமர தெரிவித்தார்.

 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த  ரயில் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள்  தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கம் மீண்டும் பரவலடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.  கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார தரப்பினர் அறிவுறுத்திய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  பொது மக்கள் பெரும்பாலும் பின்பற்றுவது கிடையாது.

  பெரும்பாலான பயணிகள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாம் ரயில் போக்குவரத்து சேவையினை பயன்படுத்துகிறார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் கனேவத்த ரயில் மறு அறிவித்தல் விடுக்கும்  மூடப்பட்டுள்ளது.

 ரயில் நிலையங்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள்   சுகாதார வழிமுறைகளை பின்பற்றவும்  தேவையான வசதிகளை புiகையிரத திணைக்களம் இதுவரையில்  ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.கடந்த வருடம் ஒப்டோபர் மாதத்திற்கு பிறகு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறான நிலையில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழமையாக கடைப்பிடிப்பது கடினமாகும் என்றார்.