இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்திலுள்ள வசாய்-விரார் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 13 பேர் உயிரிழந்தனர்.

 

இதனால் சில நோயாளிகள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராதான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 

இதனால் அங்குள்ள வைத்தியசாலைகளில் நோயாளிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். போதிய அளவு உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் அம்மாநிலம் கடும் சிரமங்களை சிந்தித்து வருகிறது.

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் நாசிக்கில் ஒக்சிசன் கசிவு காரணமாக 24 பேர் உயிரிழந்தமை  குறிப்பிடத்தக்கது.