( மனேசித்ரா )
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆளும் , எதிர்தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்.
நேற்று முன்தினம் (21) ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற சபாபீடத்தில் ஆளும் - எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் சபைக்கு வெளியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சியை ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்க முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆராய பாராளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஏழுபேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தலைவராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, உறுப்பினர்களாக சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, சுசில் பிரேம்ஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM