வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

அரச சொத்து மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தயமை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

எஸ்.எம் ரஞ்சித் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரின் 03 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மேலதிகமாக 03 வாகனங்களை பெற்றுக் கொண்டமை, மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட 67 இலட்சம் ரூபா அதிகமாக எரிபொருள் பெற்றுக் கொண்டதால் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.