கணவன், மனைவி மீது வாள்வெட்டு

By T Yuwaraj

22 Apr, 2021 | 09:16 PM
image

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில் நேற்று 21.04.2021 இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right