இன்று நள்ளிரவு முதல் குளியாப்பிட்டிய பொலிஸ் பகுதி தனிமைப்படுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குருநாகல், கணேவத்தையில் உள்ள தித்தவெல்லகல கிராமசேவகர் பிரிவு  நேற்று தனிமைப்படுத்தப்பட்டது.

இதையடுத்தே இன்று நள்ளிரவு முதல் குளியாப்பிட்டிய பொலிஸ் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி இன்று மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.