யாழில் வயோதிபர்களை அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சூத்திரதாரி சிக்கினார்

Published By: Digital Desk 4

22 Apr, 2021 | 09:05 PM
image

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 18 பவுண் தங்கநகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின் வீட்டுக்குள் சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அந்த கொள்ளை உட்பட கந்தரோடை, நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நல்லூரைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகைகளை வாங்கியமை, விற்றுக் கொடுத்தமை மற்றும் அடகு பிடித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சந்தேக நபர்கள் 7 பேரும் யாழ். பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21