அக்கரைப்பற்று பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்,பாலமுனை பகுதியிலுள்ள  சந்தேக நபரின் வீட்டில் வைத்து  கடந்த 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்  தங்கை உறவு முறை கொண்ட சிறமி ஒருவரையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.