(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை  கால்பந்தாட்ட வீரர்கள் நேற்றைய தினம் நினைவு கூர்ந்தனர். 

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 2 வருடம் பூர்த்தியானது. 

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் சீ ஹோக்ஸ் மற்றும் புளு ஈகள்ஸ் அணி வீரர்கள் போட்டியை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடதக்கது.