Published by T. Saranya on 2021-04-22 16:26:06
செவ்வாய் கோளில் ஒக்சிசனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'பெர்ஸிவியரன்ஸ்' ரோவர் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாயில் தனது கால்களை பதித்தது.
சுமார் 293 மில்லியன் மைல்கள் என்ற மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு ஜெஸிரோ பள்ளத்தில் (Jezero Crater) கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பெர்ஸிவியரன்ஸ் ரோவர் தரையிறங்கியது.
இந்நிலையில், நாசாவின் ரோவர் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. அதன், ஆறு சக்கர ரோபோ செவ்வாய் வளிமண்டலத்திலிருந்து சில கார்பன் டை ஒக்சைடை ஒக்சிசனாக மாற்றியுள்ளது.
பூமி அல்லாது வேறொரு கிரகத்தில், கார்பன் டை ஒக்சைட் ஒக்சிசனாக மாற்றப்படுவது இதுவே முதன்முறை நடந்தது என்று நாசா புதன்கிழமை தெரிவித்துள்ளது.