(ஏ.என்.ஐ)

ஜப்பானின் விண்வெளி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்கள் உட்பட நூற்றுக்கணக்கானவற்றை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்துவதற்கு  சீன இராணுவம் ஹெக்கர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

சைபர் தாக்குதல்கள் தொடர்பான டிஜிட்டல் பதிவுகளை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குரைஞர்களுக்கு ஆவணங்களை அனுப்பியதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்புத்துறையான என்.எச்.கே தெரிவித்துள்ளது.

டோக்கியோ பெருநகர காவல்துறை, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் முகவரகம், 2016 ஆம் ஆண்டில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில் மேற்படி சீன பிரஜையானவர் வயதானவர் என்றும் அவர் கணினி பொறியியலாளர் என்பதோடு தவறான பெயர்களில் ஐந்து தடவைகள் தகவல் காப்பகங்களை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

குறித்த தகவல் காப்பகங்களின் முகவரி மற்றும் பிற நற்சான்றிதழ்கள் 'ரிக்' என்று அழைக்கப்படும் சீன ஹக்கர் குழுவுக்கு குறித்த நபரால் அனுப்பப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஜப்பானில் சைபர் தாக்குதல்களை நடத்த சீன மக்கள் விடுதலை இராணுவம் ரிக்கிற்கு அறிவுறுத்தியதாக டோக்கியோ பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

மிட்சுபிஷ் எலக்ட்ரிக் மற்றும் கியோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட சுமார் 200 நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த தாக்குதலை நடத்துவதற்காக குறிவைக்கப்பட்டதாகவும் விசாரணைகளை முன்னெடுக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் முகவரகத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகையில், 'விண்வெளி நிறுவனம் அங்கீகரிக்கப்படாத அணுகலை உணர்ந்ததாகவும் ஆனால் தரவு கசிவு அல்லது பிற சேதங்களை சந்திக்கவில்லை' என்றார்.

இதற்கிடையில், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பல தகவல் காப்பகங்கள் வாடகைக்கு எடுத்ததாகக் மற்றொரு சீன பிரஜையும் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டார்.  

ஜப்பானின் சைபர் தாக்குதல்களுக்குப் பொறுப்பான பணியகத்தன் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. 

சர்ச்சைக்குரிய கிழக்கு சீனக் கடலில் பெய்ஜிங்கின் அதிகரித்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் இந்த வெளிப்பாடு வந்துள்ளது.

பெய்ஜிங் புதிய சட்டத்தை அமுல்படுத்திய பின்னர், நாட்டின் அரை இராணுவப்படையினர் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது சட்டவிரோதமாக தனது கடலுக்குள் பிரவேசிக்கும் அனைத்து கடற்கலங்களுக்குமானது என்றே சீனா கூறுகின்றது.

கடந்த மாதம், ஜப்பானின் கட்டப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளுக்கு அருகில் சீன கடலோரக் காவற்டையின் படகுகள் வாரத்திற்கு இரண்டு தடவைகள் பிரவேசித்திருந்தன. இந்தத் தீவானது சீனர்களால் டயோயு என்று அழைக்கப்படுவதோடு அது தொடர்பில் உரிமைக் கோரலும் தொடர்கிறது.

இதேவேளை, கடந்த மாதம் அமெரிக்க நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையை  சீனாவுடன் இணைக்கப்பட்ட அதிநவீன ஹெக்கர்கள் குழு கைப்பற்றி தாக்குதல் நடத்தியிருந்தது. 

மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்சிற்கான தகவல் காப்பங்களுக்குள் ஹெக்கர்கள் பிரவேசிப்பதற்கு அதன் மென்பொருளில் உள்ள நான்கு பாதிப்புகள் காரணமாக இருக்கின்றன என்று நிறுவனம் கூறியது. 

எனினும், ஹக்கர்கள் மின்னஞ்சல் கணக்குகளுக்கான அணுகலை செயல்படுத்தியமை மற்றும் இலகுவாக தீம்பொருளை நிறுவுவதற்கும் அனுமதித்தது' என்று சி.என்.என் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'மாநில அடிப்படையிலான நடிகர்' ஒருவர் கடந்த ஆண்டு, பாரிய சட்டவிரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டார். பாதுகாப்பு மீறலில் இறங்கிய அவர் அவுஸ்திரேலியாவில் பாரிய சைபர் தாக்குதலை முன்னெடுத்திருந்தமையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.