உள் நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபான போத்தல்களிலும் கியூஆர் குறியீட்டை கொண்ட பாதுகாப்பு ஸ்டிக்கர் முத்திரைகளை ஒட்டும் செயற்பாடு ஜூலை முதலாம் திகதி தொடக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கியூஆர் குறியீட்டைக் கொண்ட பாதுகாப்பு ஸ்டிக்கரின் துல்லியத்தை உறுதிப்படுத்த பொதுமக்களுக்கு ஒரு சிறப்பு கையடக்கத் தொலைபேசி பயன்பாடு மற்றும் குறுஞ்செய்தி சேவை வடிவமைக்கப்படும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் திணைக்களம் இந்த முயற்சியைத் தொடங்கியது, பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக ஸ்டிக்கர்களின் முத்திரை இறக்குமதி செய்யப்பட்ட மதுபான போத்தல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.