(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ள அதேவேளை , தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளன.  

அத்தோடு இதற்கு முன்னர் தொற்றாளர்கள் இனங்காணப்படாத பல பிரதேசங்களிலும் பெருமளவான தொற்றாளர்கள் கடந்த சில வாரங்களாக இனங்காணப்படுகின்றனர். 

இது மிகுந்த எச்சரிக்கை மிக்க நிலைமையாகும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.

எனவே மீண்டுமொரு முறை கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற நிலைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பொது மக்கள் நிச்சயமாக அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலைமை தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ;

இலங்கையில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ள அதேவேளை , தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளன.  

அத்தோடு இதற்கு முன்னர் தொற்றாளர்கள் இனங்காணப்படாத பல பிரதேசங்களிலும் பெருமளவான தொற்றாளர்கள் கடந்த சில வாரங்களாக இனங்காணப்படுகின்றனர்.

இந்த நிலைமை தொடர்பான விஞ்ஞான பூர்வமான காரணிகள் ஆராயப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் இந்த நிலைமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தொற்றை தவிர்க்கக் கூடிய விதிமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக பரவலை துரிதமாக கட்டுப்படுத்த முடியும் என்பதை முன்னரே நாம் அனைவரும் அறிவோம்.  

கடந்த உற்சவ காலத்திலும் அதனை அண்மித்த காலப்பகுதிகளிலும் இவற்றை முறையாக பின்பற்றாமையே தற்போதைய அபாய நிலைக்கு காரணமாகும்.

மீண்டுமொரு முறை கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற நிலைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பொது மக்கள் நிச்சயமாக அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை நினைவுபடுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பேணுதல், இருமல், தொண்டை வலி, தடிமன் உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் காணப்படுமாயின்,  அவ்வாறானவர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இதற்கு முன்னர் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றியதன் காரணமானமாகவே கடந்த சில மாதங்களாக அனைவருக்கும் சுதந்திரமாக நடமாடக் கூடியதாக இருந்தது. எனவே மீண்டும் அவ்வாறிருப்பது கடினமானதல்ல.  

அதற்கமைய எதிர்வரும் காலங்களிலும் மீண்டும சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதோடு,  அநாவசியமான போக்குவரத்துக்களையும் தவிர்க்க வேண்டும்.

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று தீவிரமடைவதை தடுக்க அனைவரையும் ஒத்துழைக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்கிறது.