கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் ஒரு பகுதியொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, குருணாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.