மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் திறந்துவைக்கப்பட்டு தீபச் சுடர் ஏற்றி மலர்வளையம் வைத்து  இன்று மாலை அஞ்சலி  செலுத்தினர்.  

சீயோன் தேவாலயத்தின்; ஏற்பாட்டில் நிர்மானிக்கப்பட்ட இந்த நினைவுதூபி போதகர் மகேசன் ரொசான் தலைமையில் திறக்கப்பட்டது. இதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் சசிநந்தன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி முகுந்தன் நவரூபரஞ்சினி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர்வளையம் வைத்து  தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

இதில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள்  தேவஅடியார்கள் கலந்துகொண்டு தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை

குறுpப்பிடத்தக்கது.